மேலும் செய்திகள்
கோடைகால பயிற்சியில் பங்கேற்க அழைப்பு
22-Apr-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், நாளை மறுதினம் முதல், மே 15ம் தேதி வரை 21 நாட்கள், காலை 6:30 மணி முதல், 8:30 மணி வரையிலும் மற்றும் மாலை 4:30 மணி முதல், 6:30 மணி வரையிலும் கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.இப்பயிற்சியில் தடகளம், இறகுபந்து, கைப்பந்து, ஜூடோ, கபடி, டென்னிஸ், கால்பந்து, ஹாக்கி மற்றும் கூடைபந்து போன்ற விளையாட்டுகள் நடைபெற உள்ளன.இப்பயிற்சியில் பங்கேற்கும் மாணவ - மாணவியர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திட்டங்கள் மற்றும் போட்டிகள் குறித்தும் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.மேலும், முறையான பயிற்சியும் ஊட்டச்சத்தான சிற்றுண்டியும் வழங்கப்படும். மேலும், பயிற்சி முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 18 வயதிற்குட்பட்ட பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவ - மாணவியர் மற்றும் மாணவர் அல்லாதவர்களும் பங்கேற்கலாம்.இப்பயிற்சி முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது பெயர் விபரங்களை, அலுவலக வேலை நேரத்தில், காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை நேரடியாகவும் அல்லது மொபைல் வாயிலாகவும் பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் பெயர்களை பதிவு செய்ய மற்றும் கூடுதல் விபரங்களுக்கு 74017 03481 என்ற மொபைல் போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
22-Apr-2025