உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாலில் கஞ்சா விற்ற சூப்பர்வைசர் கைது

மாலில் கஞ்சா விற்ற சூப்பர்வைசர் கைது

வடபழனி:சென்னை, வடபழனியில் பிரபல தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு கஞ்சா விற்கப்படுவதாக, தி.நகர் துணை கமிஷனரின் தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.நேற்று முன்தினம் மாலை, சாதாரண உடையில் போலீசார் அந்த வணிக வளாகத்தில் கண்காணித்தனர். அப்போது, வாலிபர் ஒருவர், அங்கு வரும் நபர்களுக்கு சிறிய பொட்டலம் கொடுத்து, பணம் வாங்கிக் கொண்டிருந்தார்.அவரைப் பிடித்து சோதனையிட்ட போது, 15 பொட்டலம் கஞ்சா சிக்கியது. அவரை கைது செய்து, வடபழனி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், நெசப்பாக்கத்தைச் சேர்ந்த வேலு, 22, என தெரிந்தது. இவர், அந்த வணிக வளாகத்தில் நான்கு ஆண்டுகளாக 'ஹவுஸ் கீப்பிங்' மேற்பார்வையாளராக வேலை பார்த்துக் கொண்டே, கஞ்சா விற்று வந்ததும் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை