உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஒன்றியம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், காஞ்சிபுரம் குப்புசாமி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பள்ளி ஆயத்த பயிற்சி மையம் இயங்கி வருகிறது.இங்கு மாற்றுத்திறன் கொண்ட 11 மாணவர்களுக்கு தேவையான ஸ்பிளின்ட், காலிபர், முழங்கால் கால்நடை, காதொலி கருவி, ஸ்பைரோ மீட்டர் உள்ளிட்ட உபகரணங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ