| ADDED : பிப் 23, 2024 11:46 PM
சென்னை:மின் வழித்தட பராமரிப்பு பணி காரணமாக, நாளை காலை 11:00 மணி மதியம் 3:15 மணி வரை, தாம்பரம் - கடற்கரை தடத்தில், மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.காலை 10.05 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, 10 நிமிடங்களுக்கு ஒரு முறையும், மதியம் 1:00 மணி முதல் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.அதேபோல், காலை 9:30 மணிக்கு, காஞ்சிபுரத்திலிருந்தும், 9:40 மணிக்கு செங்கல்பட்டிலிருந்தும், 11:05 மணிக்கு திருமால்பூரில் இருந்தும் கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்களும், ரத்து செய்யப்படுகின்றன. அதேநேரம், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு ஒரு சில ரயில்கள் மட்டும் இயக்கப்படும். ரயில்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், சென்னை மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களை கூடுதலாக இயக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.இத்தகவல், சென்னை பிரிவு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.