தமிழக வெற்றி கழகம் காஞ்சியில் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம்:வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து, தமிழக வெற்றி கழகம் சார்பில், தமிழகம் முழுதும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.காஞ்சிபுரத்தில் தாலுகா அலுவலகம் எதிரே, காஞ்சிபுரம் மாவட்ட செயலர் தென்னரசு தலைமையில், தமிழக வெற்றி கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக, அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனால், தாலுகா அலுவலகம் சுற்றிலும் போக்குவத்து நெரிசல் ஏற்பட்டது.