உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  வரதர் கோவிலில் தமிழிசை விழா

 வரதர் கோவிலில் தமிழிசை விழா

காஞ்சிபுரம்: கலை பண்பாட்டு துறை, காஞ்சிபுரம் மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தமிழிசை விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் கார்த்திகேயன் வரவேற்றார். காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் வாழ்த்துரை வழங்கினார். தவில் வலையப்பட்டி வழங்கும் நாதஸ்வரம், தவில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில், திருக்கோவிலுார் டி.பாலாஜி குழுவினரின் நாதஸ்வரமும், வலையப்பட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியம் குழுவினரின் தவில் இசை நிகழ்ச்சியும், ஹரிணி ஜீவிதாவின், பிரபந்தமும் பரதமும் என்ற தலைப்பில், பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அரசு இசை பள்ளி தலைமை ஆசிரியை ரமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ