உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிலிண்டர் வெடித்து மூன்று பேர் காயம்

சிலிண்டர் வெடித்து மூன்று பேர் காயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே உள்ள செவிலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமாரி, 38; ஆட்டோ ஓட்டுனர். இவர், வழக்கம்போல பணியை முடித்துவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, சமையல் அறையில் மனைவி கீர்த்திகா, 32, சமைத்துக் கொண்டிருந்தபோது, திடீரென சிலிண்டர் வெடித்ததில், ஆட்டோ ஓட்டுனர் சுடலைமாரி, அவரது மனைவி கீர்த்திகா, இவர்களது 3 வயது பெண் குழந்தை ஆகிய மூவரும் காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, காஞ்சிபுரம்தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்