முன்கூட்டியே பதிவேட்டில் கையழுத்திட்ட கவுன்சிலர்கள் கூட்டம் நடக்கும் முன் எழுந்த சர்ச்சை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேயர் மகாலட்சுமிக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையேயான பிரச்னை, கடந்த ஓராண்டாகவே தொடர்ந்தபடி உள்ளது. பல கட்ட பிரச்னைகளுக்கு பின், கடந்த செப்., 3ம் தேதி மாநகராட்சி கூட்டம் நடந்தது.இரு மாதங்களாக மாநகராட்சி கூட்டம் நடத்தப்படாமல் இருந்த நிலையில், இம்மாதம் 19ம் தேதி மாநகராட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கான வருகை பதிவேட்டில், தி.மு.க., கவுன்சிலர்கள் முன்கூட்டியே கையெழுத்து போட்டிருப்பதாக, தி.மு.க., உள்ளிட்ட எட்டு கவுன்சிலர்கள் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.அதில், தி.மு.க.,வைச் சேர்ந்த நான்கு கவுன்சிலர்கள் முன்கூட்டியே கையெழுத்திட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுபற்றி, மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன் விசாரித்து வருகிறார்.மாநகராட்சி கூட்டம் நடத்த இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில், முன்கூட்டியே வருகை பதிவேட்டில், கவுன்சிலர்கள் கையழுத்து போட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.