உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / எல்லையம்மன் கோவிலில் திருவிழா வெகுவிமரிசை

எல்லையம்மன் கோவிலில் திருவிழா வெகுவிமரிசை

தாமல்:காஞ்சிபுரம் அடுத்த, தாமல் கிராம மாரி எல்லையம்மன் கோவிலில், காணும் பொங்கல் திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது.அம்மனுக்கு, காப்பு கட்டிய பக்தர்கள், நேற்று மாலை நேர்த்தி கடன் செலுத்துவதற்கு, அலகு குத்தி வாகனங்களில் தொங்கி வந்து, நேர்த்தி கடன் செலுத்தினர். ஒரு சிலர் தீ சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து, அம்மனை வழிபட்டு சென்றனர்.அதை தொடர்ந்து, இரவு 8:00 மணி அளவில், மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதியுலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ