உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கவுதமேஸ்வரர் கோவிலில் பாலாலயம்

கவுதமேஸ்வரர் கோவிலில் பாலாலயம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வேளிங்கப்பட்டரை அரசமர தெருவில், 108 லிங்கத்தில் 54வது லிங்கம் அமைந்துள்ள கவுதமேஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி குழுவினர் மற்றும் பகுதிவாசிகள் முடிவு செய்தனர்.அதன்படி, திருப்பணி துவங்க உள்ளதையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு வேதவிற்பன்னர்கள் வாயிலாக பல்வேறு ஹோமங்களுடன் பாலாலயம் நடந்தது. பல்வேறு திருப்பணிகள் முடிக்கப்பட்டு, பிப்., 10ம் தேதி காலை 4:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாட்டை திருப்பணி குழுவினர், வேளிங்கப்பட்டரை, முருகம்மாள் நகர், ஓரிக்கை பகுதியினர், மங்கள இசை குழுவினர் இணைந்து செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை