மேலும் செய்திகள்
செடிகளால் குடிநீர் தொட்டி வலுவிழக்கும் அபாயம்
15 hour(s) ago
கிளக்காடி ஏரிக்கால்வாயில் சிறுபாலமின்றி விவசாயிகள் அவதி
15 hour(s) ago
கற்றலில் பின்தங்கிய மாணவ - மாணவியருக்கு சிறப்பு பயிற்சி
15 hour(s) ago
சென்னை:சென்னை, பெரம்பூர், பாரதி முதல் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி, 18; கல்லுாரி மாணவி. இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட, தாய், தங்கையுடன் வசித்து வந்தார்.ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்த வாலிபரும், இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. சில நாட்களாக, அவரிடம் பேசுவதை கிருஷ்ணகுமாரி நிறுத்திஉள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், ஒன்றாக எடுத்த புகைப்படங்களை குடும்பத்தாரிடம் காட்டி விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான கிருஷ்ணகுமாரி, கடந்த 2ம் தேதி வீட்டின் 2வது மாடியில் இருந்து குதித்துள்ளார்.இதில் படுகாயம்அடைந்தவர், ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.இது குறித்து செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், இது தொடர்பாக மேல் நடவடிக்கை எதுவும் வேண்டாம் என, கிருஷ்ணகுமாரி குடும்பத்தினர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago