| ADDED : டிச 23, 2025 05:35 AM
நெமிலி: விருதசீர நதியில் பாலம் கட்டித்தர வேண்டும் என, கணபதிபுரம் கிராம மக்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவில், கணபதிபுரம் காலனி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இறந்தவர்களை உடலை, விருதசீரநதி கரை ஓரம் புதைக்கவும், எரிக்கவும் செய்கின்றனர். தற்போது, விருதசீரநதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், நதியில் இறங்கி மறு கரையில் இருக்கும் சுடுகாட்டிற்கு செல்ல வேண்டி உள்ளது. நேற்று, கணபதிபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஒருவர் இறந்து விட்டார். அவரின் உடலை, அவரது உறவினர்கள் விருதசீர நதியில், இடுப்பளவு நீரில் இறங்கி சென்று அடக்கம் செய்து விட்டு வந்தனர். விருதசீரநதியில், தண்ணீர் செல்லும் போது, இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதில், பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. எனவே, விருதசீர நதியில் பாலம் கட்டித்தர வேண்டும் என, கணபதிபுரம் கிராம மக்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.