வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்போற்சவம் விமரிசை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் தெப்பக்குளத்தில், ஆண்டுதோறும் தை பவுர்ணமியன்று தெப்போற்சவம் துவங்கி, மூன்று நாட்கள் நடைபெறும். அதன்படி, நடப்பாண்டுக்கான முதல் நாள் தெப்போற்சவம் நேற்று துவங்கியது.நேற்று இரவு 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார் மற்றும் பெருந்தேவி தாயாருடன், வரதராஜ பெருமாள் ‛அனந்தசரஸ்' என அழைக்கப்படும் தெப்பக்குளத்தில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்தார்.இரண்டாம் நாளன்று இன்று ஐந்து முறையும், தெப்போற்சவம் நிறைவு நாளன்று, ஏழு முறையும் தெப்ப குளத்தில் வரதராஜ பெருமாள் வலம் வருவார். தெப்போற்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.