| ADDED : பிப் 25, 2024 12:38 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை, காலை 6:30 மணிக்கு நடைபெறுகிறது.இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் துளசிதாசர் மடம் சார்பில், அஷ்டபுஜ பெருமாள் கோவிலுக்கு, 2 திருக்குடைகள் நேற்று உபயமாக வழங்கப்பட்டன.துளசிதாசர் மடத்தின் மடாதிபதி நம்பிள்ளை ராமானுஜ மஹா தேசிக சுவாமிகள், அஷ்டபுஜ பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்.கே.பி.எஸ்.சந்தோஷ்குமார், கோவில் செயல் அலுவலர் ரா.கார்த்திகேயன் ஆகியோரிடம் நேற்று, திருக்குடையை முறைப்படி வழங்கினார்.முன்னதாக வரதராஜ பெருமாள் கோவிலிலில் இருந்து, இரு திருக்குடைகளும் அஷ்டபுஜ பெருமாள் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.