மேலும் செய்திகள்
வரதராஜர் வனபோஜன உற்சவம் களக்காட்டூரில் விமரிசை
31-Jan-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளின் அந்தரங்க பக்தராகவும், திருவாலவட்டம் எனப்படும் விசிறி வீசும் முதலான கைங்கர்யம் செய்வதாராகவும் விளங்கியவர் திருக்கச்சிநம்பிகள் என, வரலாறு கூறுகிறது. திருக்கச்சிநம்பிகளுக்கு, காஞ்சிபுரம் ரங்கசாமிகுளம் அருகே உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இருந்து, வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் வழியில், தனி கோவில் உள்ளது. இதனால், இத்தெருவிற்கு திருக்கச்சிநம்பி தெரு என பெயர் வந்தது.ஆண்டுதோறும் மாசி மாதம், திருக்கச்சிநம்பிகளுக்கு, மாமுல்படி எனப்படும், வருஷோத்ஸவம் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டு வருஷோத்ஸவ உற்சவம் நேற்று துவங்கியது.மார்ச் மாதம் 7ம் தேதி வரை உற்சவம் நடக்கிறது. உற்சவத்தையொட்டி, தினமும் காலையில், திருக்கச்சிநம்பிகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மஹாதீபாராதனையும், மாலை மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.மார்ச் 6ம் தேதி மாலை 6:00 மணிக்கு, ஆடிசன்பேட்டை செட்டி தெருவில், திருக்கச்சிநம்பிகள் வீதியுலா மற்றும் மண்டகப்படி உற்சவமும், மார்ச் 7ம் தேதி மிருகசீரிஷ நட்சத்திர சாற்றுமறையும், மாலை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், திருக்கச்சிநம்பிகள் சன்னிதிக்கு எழுந்தருளி, சேவை சாற்றுமறை உற்சவம் நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாட்டை திருக்கச்சிநம்பிகள் தேவஸ்தான தர்மகர்த்தாக்கள், நிர்வாக அறங்காவலர் சதீஷ்குமார், அறங்காவலர்கள் சாரதி, நித்யானந்தம், சண்முகம், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.
31-Jan-2025