மேலும் செய்திகள்
தக்காளி விலை கிடுகிடு உயர்வு
05-Oct-2024
காஞ்சிபுரம், ஆந்திர மாநிலத்திலும், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட மாவட்டத்தில் விளையும் தக்காளி காஞ்சிபுரம் சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.ஆந்திராவில் விளைச்சல் அதிகமாகி, வரத்து அதிகரித்ததால், காஞ்சிபுரத்தில் உள்ள காய்கறி சந்தை மற்றும் நடமாடும் கடைகளில் 6 கிலோ தக்காளி, 100 ரூபாய்க்கு என கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த மாதம் துவக்கத்தில் கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், அதே மாதம் இரண்டாவது வாரத்தில், தக்காளி விலை கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மேலும், ஆந்திர மாநிலத்தில் இருந்து தக்காளி வரத்து வெகுவாக குறைந்ததால், காஞ்சிபுரத்தில் நேற்று, கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இதுகுறித்து, காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியைச் சேர்ந்த தக்காளி வியாபாரி மணி கூறியதாவது:சமீபத்தில் பெய்த மழையால் ஆந்திராவில் தக்காளி விளைச்சல் பாதித்துள்ளது. மேலும், அங்கிருந்து வடமாநிலங்களுக்கும் அதிகளவு தக்காளி அனுப்பப்படுகிறது. இதனால், காஞ்சிபுரம் சந்தைக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், கடந்த மாதம், 28 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி, 1,000 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, 2,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.ஒரு பெட்டிக்கு, இருமடங்காக விலை உயர்ந்துள்ளதால், கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். ஒரு சில நாட்களில் தக்காளி விலை, 100 ரூபாயை தாண்டும் நிலை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
05-Oct-2024