உத்திரமேரூரில் வாகன நெரிசல்: போக்குவரத்து போலீசார் அவசியம்
உ த்திரமேரூரில் பிரதான சாலைகளான பஜார் வீதி. செங்கல்பட்டு சாலை, எண்டத்துார் சாலை, மானாம்பதி சாலை வழியாக சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வந்தவாசி, செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. உத்திரமேரூரில் இருந்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளுக்கு, காலை, மாலையில், டூ -- வீலர்களில் வேலைக்கு செல்வோர் பீக் அவர் நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றனர். எனவே, உத்திரமேரூரில், காலை, மாலை நேரங்களில், போக்குவரத்து நெரிசலை சீரமைக்க போக்குவரத்து போலீசார் வேண்டும். - ஜி. கார்த்திகேயன், உத்திரமேரூர்.