மேலும் செய்திகள்
நாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதி
4 minutes ago
தி.மு.க.,வை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
6 minutes ago
வாலாஜாபாத்: வாலாஜாபாத், அங்கன்வாடி உதவியாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த இப்பயிற்சி முகாமில், வாலாஜாபாத் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் இந்திரா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட இயக்குநர் கந்தன் மற்றும் மருத்துவர் அடங்கிய குழுவினர் பயிற்சி அளித்தனர். இதில், குழந்தைகளுக்கு முன் பருவ கல்வி மூலம் அவர்களது வளர்ச்சிக்கு உதவுவதற்கான செயல் பாடுகள், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை தடுத்தல், கர்ப்பிணியருக்கான சத்துணவு, குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளை கண்டறிதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி முகாமில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பிற அரசு திட்டங்கள் குறித்தும் இப்பயிற்சி முகாமில் விளக்கப்பட்டது.
4 minutes ago
6 minutes ago