உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நாயகன்பேட்டையில் சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி

நாயகன்பேட்டையில் சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, நாயகன்பேட்டையில் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா, கடந்த மாதம் 26ம் தேதி துவங்கியது. இதில், வேணுகோபால சுவாமி குழந்தை வடிவமாக தொட்டிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இவ்விழாவின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம், மாலை 6:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் உபயநாச்சியாருடன் எழுந்தருளிய வேணுகோபால சுவாமி முக்கிய வீதி வழியாக வந்தார். தொடர்ந்து உறியடி திருவிழாவும், சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் விமரிசையாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ