மேலும் செய்திகள்
முன்விரோத தகராறு ஒருவர் மீது வழக்கு
03-Nov-2024
குன்றத்துார் ஆஸ்பிடலில் தாய், தந்தைக்கு சிகிச்சை
14-Nov-2024
குன்றத்துார்:குன்றத்துார் அருகே, மணஞ்சேரியைச் சேர்ந்தவர் கிரிதரன், 34. குன்றத்துாரில் ஒரு தனியார் வங்கி மேலாளர்.இவரது வீட்டில், எலிகள் தொல்லை அதிகமாக இருந்ததால், நேற்று முன்தினம் இரவு, வீட்டினுள் ஆங்காங்கே, எலி மருந்துகளை வைத்துள்ளார்.பின், இரவு உணவு சாப்பிட்டு, மனைவி பவித்ரா, 30, மகள் விஷாலினி, 6, மகன் சாய் சுதர்சன், 1, ஆகியோருடன், கிரிதரன் படுத்து உறங்கினார்.நேற்று காலை எழுந்ததும், அனைவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்குடன் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிரிதரன், தன் நண்பருக்கு மொபைல் போனில் தகவல் தெரிவித்தார்.பின், பெற்றோர், இரு குழந்தைகள் என, நான்கு பேரும் மீட்கப்பட்டு, குன்றத்துார் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, மகள் விஷாலினி, மகன் சாய் சுதர்சன் ஆகியோர், சிகிச்சை பலனின்றி இறந்தனர்.கிரிதரன், பவித்ரா ஆகியோர், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தின் நெடி பரவி, நான்கு பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டதா அல்லது எலி மருந்து எதிர்பாராத விதமாக உணவில் கலந்ததா என, குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Nov-2024
14-Nov-2024