| ADDED : பிப் 16, 2024 11:14 PM
பூந்தமல்லி:பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, வடக்கு மலையம்பாக்கம், பெரியார் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 19; எம்.ஜி.ஆர்., பல்கலையில், பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர், வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, பெருமாள் கோவில் அருகே நேற்று முன்தினம், நண்பர் ஒருவருடன் நடந்து சென்றார்.அப்போது, அவர்களை வழிமறித்த நான்கு பேர் கும்பல், பிரவீன்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியது. படுகாயமடைந்த பிரவீன்குமார், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து, நசரத்பேட்டை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். இதில் பிரவீன்குமாருக்கும், பூந்தமல்லி சாரதாம்மாள் நகரைச் சேர்ந்த கருணேஷ், 19, என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.இதனால் சதீஷ், 20, உள்ளிட்ட மேலும் மூவருடன் சேர்ந்து, பிரவீன்குமாரை கருணேஷ் தாக்கியது தெரிந்தது. நேற்று, மேற்கண்ட இருவரையும் கைது செய்த போலீசார், மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.