உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  இரு விபத்துகளில் இரு வாலிபர்கள் உயிரிழப்பு

 இரு விபத்துகளில் இரு வாலிபர்கள் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே, இரு வேறு விபத்துகளில் சிக்கி, இரு வாலிபர்கள் உயிரிழந்தனர். காஞ்சிபுரம் அடுத்த, கீழம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் அஜய், 19. கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், கீழம்பியில் இருந்து பாலுச்செட்டிச்சத்திரம் நோக்கி, இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, அதே திசையில் சென்ற கன்டெய்னர் லாரி பின்பக்கம் மோதியதில், அஜய், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல, நேற்று முன்தினம், இரவு 10:45 மணியளவில், குண்டுகுளம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், 21. என்பவர், தன் வீட்டிலிருந்த வெள்ளைகேட் நோக்கி, 'ஹீரோ ஸ்பிளன்டர்' இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, அதே திசையில் வந்த, 'நிஸ்ஸான்' கார், மோதிக் கொண்டது. இதில் தனுஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ