மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு நிதி ஒதுக்கீடு
20-Sep-2025
காஞ்சிபுரம்:வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, அவரவரின் கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு உதவித்தொகை வழங்குகிறது. இந்த உதவித்தொகை பெற வேலை வாய்ப்பு மையத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் பதிவு செய்திருக்க வேண்டும். இதில், மாற்றுத் திறனாளிகள் ஒராண்டு நிறைவு செய்திருந்தால் போதும். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் 45 வயதிற்குட் பட்டவராகவும்; இதர பிரிவினர், 40 வயதிற்குபட்டவராகவும் இருக்க வேண்டும். இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. உதவித்தொகை பெற விரும்புவோரின் ஆண்டு வருவாய், 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் வேலை வாய்ப்பு பதிவு அட்டையுடன், அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், www.tnvelaivaaippu.gov.in//empower http://www.tnvelaivaaippu.gov.in//empower என்கிற இணைய தள முக வரியில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20-Sep-2025