உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  தடுப்பு இல்லாத வேளியூர் குளம்

 தடுப்பு இல்லாத வேளியூர் குளம்

காஞ்சிபுரம்: வேளியூர் பொது குளத்திற்கு, தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த, வேளியூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளி அருகே, கிராம பொது குளம் உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிப்புகளின் நடுவே, மூன்று ஏக்கர் பரப்பளவில், மிகப் பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றிலும், ஊராட்சி நிர்வாகம் கற்கள் பதித்து, படிக்கட்டுகள் கட்டியுள்ளனர். இருப்பினும், குளத்தை சுற்றிலும் வேலி அமைக்கவில்லை. இதனால், குடியிருப்புகளில் இருக்கும் குழந்தைகள் விளையாடும் போது, தவறி குளத்தில் விழும் நிலை உள்ளது. எனவே , சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து, பொது குளத்திற்கு வேலி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ