உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கனரக வாகனங்களால் நெரிசல் படப்பையில் தீராத தலைவலி

கனரக வாகனங்களால் நெரிசல் படப்பையில் தீராத தலைவலி

படப்பை:வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும் அதிக அளவிலான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் படப்பை பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள், கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கி, தற்போது வரை மந்த கதியில் நடைபெற்று வருகின்றன.பாலம் கட்டுமான பணிக்காக சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதனால், சாலை குறுகலாக மாறியதால், படப்பை பஜாரில் போக்குவரத்து நெரிசல் வழக்கத்தை விட இரு மடங்கு அதிகரித்தது. நெரிசலை கட்டுப்படுத்த, பாலம் கட்டுமான பணி நடக்கும் இடத்தின் அருகே இருந்த பேருந்து நிறுத்தம், வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில், படப்பை பஜார் பகுதி வழியே தினமும் ஏராளமான கனரக லாரிகள் செல்வதால், நாள் முழுக்க நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன.இதனால், பாலம் பணி நிறைவடையும் வரை, பகல் நேரத்தில் படப்பை பஜார் வழியே கனரக லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி