உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செடிகளுக்கு நடுவில் இயங்கும் நகர்ப்புற நலவாழ்வு மையம்

செடிகளுக்கு நடுவில் இயங்கும் நகர்ப்புற நலவாழ்வு மையம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மகாலிங்கம் நகரில், நகர்ப்புற நலவாழ்வு மைய வளாகத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி 26வது வார்டுக்கு உட்பட்ட மகாலிங்கம் நகரில், நகர்ப்புற நலவாழ்வு மையம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் நுாற்றுக்கணக்கானோர் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், நலவாழ்வு மைய வளாகத்தில் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால், செடிகளில் தஞ்சமடைந்துள்ள ஜந்துக்கள் நலவாழ்வு மையத்திற்கு செல்லும் சூழல் உள்ளது. இதனால், நோய் தீர நலவாழ்வு மையத்திற்கு வருவோருக்கு விஷ ஜந்துக்களால் அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, மகாலிங்கம் நகர், நலவாழ்வு மையத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !