உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேவரியம்பாக்கம் குளத்திற்கு தடுப்பு ஏற்படுத்த வலியுறுத்தல்

தேவரியம்பாக்கம் குளத்திற்கு தடுப்பு ஏற்படுத்த வலியுறுத்தல்

வாலாஜாபாத்:தேவரியம்பாக்கத்தில் தெருவோர பொதுக் குளத்திற்கு தடுப்பு ஏற்படுத்த அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது தேவரியம்பாக்கம் கிராமம். இந்த கிராமத்திற்கு சொந்தமான தாந்தோணியம்மன் கோவில் அருகே பொதுக் குளம் உள்ளது. கோவில் விழா காலங்களில் பூஜை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும், அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரத்திற்கும் இக்குளம் பயன்பாடாக இருந்து வருகிறது.இந்நிலையில், இந்த குளத்தையொட்டிய சாலையோரத்தில் போதுமான தடுப்புகள் இல்லாமல் சிறு அளவிலான கான்கிரீட் துாண்கள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இத்தெருவின் வளைவில் வாகனங்களை இயக்கும் போது வாகன ஓட்டிகள் அச்சத்திற்கு உள்ளாகின்றனர்.எனவே, தேவரியம்பாக்கம் தெருவோர பகுதியில் உள்ள பொதுக் குளத்திற்கு பாதுகாப்பான தடுப்பு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ