உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தல்

சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் இருந்து, காமாட்சியம்மன் நெசவாளர் குடியிருப்பு காலனிக்கும் செல்லும் சாலையில், வேகவதி ஆற்றின் குறுக்கே சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது.வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த இந்த பாலத்திற்கு தடுப்புச்சுவர் இல்லை. மேலும், தெருமின்விளக்கு வசதியும் இல்லாததால், இரவு நேரத்தில் பாலம் அமைந்துள்ள பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.இதனால், இரவு நேரத்தில், இப்பாலம் வழியாக செல்லும் இருசக்கர வாகனம் ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, நிலை தடுமாறி ஆற்றில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.எனவே, ஆலடி பிள்ளையார்கோவில் தெரு - காமாட்சியம்மன் நெசவாளர் குடியிருப்பு காலனிக்கு இடையே உள்ள வேகவதி ஆற்று சிறு பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கவும், மின்விளக்கு வசதி ஏற்படுத்தவும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ