சேதமடைந்த சிமென்ட் சாலை சீரமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டு திருக்காலிமேடு பூந்தோட்ட தெரு வழியாக சின்ன காஞ்சிபுரம் பகுதிக்கு சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், கடந்த வாரம் அதிக பாரம் ஏற்றிய கனரக வாகனம் சென்றபோது, கழிவுநீர் கால்வாய் ஓரத்தில், சிமென்ட் சாலையின் ஒரு பகுதி உடைந்துள்ளது.இதனால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.விபத்தை தவிர்க்கும் வகையில், திருக்காலிமேடு பூந்தோட்ட தெருவில், சேதமடைந்த சிமென்ட் சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.