மேலும் செய்திகள்
மக்காச்சோள தட்டை சாகுபடியில் தண்டரை விவசாயிகள் ஆர்வம்
3 minutes ago
வேலை வாய்ப்பு முகாமில் 2,072 பேர் பங்கேற்பு
4 minutes ago
ஓரிக்கையில் சேதமான சாலை நெடுஞ்சாலை துறை சீரமைப்பு
5 minutes ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,545 ஓட்டுச்சாவடி முகாம்களில், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2.74 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 11.26 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். திருத்தம் வரும் ஜன., 1ம் தேதியை, தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்றவைக்கு வாக்காளர்கள் விண்ணப்பங்கள் அளிக்கலாம். மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் 1,545 ஓட்டுச்சாவடிகளிலும் நடைபெறும் சிறப்பு முகாம்களில் வாக்காளர்கள் விண்ணப்பங்களை அளிக்கலாம். ஓட்டுச்சாவடி மையங்களில், இம்மாதம் 27, 28ம் தேதிகளிலும், ஜன., 3, 4ம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடை பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 1,545 ஓட்டுச்சாவடிகளிலும், வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்வதற்கான முகாம் நேற்று நடந்தது. வாக்காளர்கள் பலரும் தங்களது பெயர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவம், 6ஐ பூர்த்தி செய்து, ஆவணங்கள் இணைத்து வழங்கினர். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியில் நடந்த பெயர் சேர்ப்பு முகாமை பார்வையிட்டார். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்கள் அளிக்கவும், வாக்காளர்கள் இணைய வழியாகவும் நேரடியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in/ என்ற இணையதளம் மற்றும் “Voters Help Line” என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். சந்தேகம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் சந்தேகம் ஏதும் இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண்044 -1950என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களைத் தெரிந்துக் கொள்ளலாம்.
3 minutes ago
4 minutes ago
5 minutes ago