உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நிரம்பி வழியும் மேல்நிலை தொட்டி ஏனாத்துாரில் குடிநீர் வீணடிப்பு

நிரம்பி வழியும் மேல்நிலை தொட்டி ஏனாத்துாரில் குடிநீர் வீணடிப்பு

ஏனாத்துார்:வாலாஜாபாத் ஒன்றியம், ஏனாத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர்., நகரில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை குழாயில் இருந்து இத்தொட்டியில் நிரப்பப்படும் குடிநீர், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பம்ப் ஆப்ரேட்டர்கள், முறையாக பராமரிக்காததால், தொட்டி முழுமையாக நிரம்பி வழிவதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.இதனால், தொட்டி அமைந்துள்ள பகுதியில் கோரை புற்கள் வளர்ந்து வருகின்றன. அடிக்கடி இதுபோல தொட்டி நிரம்பி வழிவதால், குடிநீர் வீணாகுவதோடு, மின்சாரமும் விரயமாகிறது. மின்மோட்டாரும் பழுதடையும் சூழல் உள்ளது.எனவே, பம்ப் ஆப்பரேட்டர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் நிரப்பும் பணியை முறையாக கண்காணிக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ