உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின் மோட்டார் பழுதால் குடிநீர் தொட்டி வீண்

மின் மோட்டார் பழுதால் குடிநீர் தொட்டி வீண்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், 24வது வார்டு, சேர்மன் சாம்பசிவம் தெரு, பி.எம்.எஸ்., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகில், மாநகராட்சி சார்பில், சிறுமின்விசை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.அப்பகுதி மக்கள், கூடுதல் குடிநீர் தேவைக்காக, தொட்டியில் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இந்நிலையில், 20 நாட்களுக்கு முன், குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டுள்ள நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதடைந்துவிட்டது. மின்மோட்டாரை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், அப்பகுதியினர் கூடுதல் தண்ணீர் தேவைக்காக பிற பகுதிக்கு சென்று குடிநீர் பிடித்து வரவேண்டிய நிலை உள்ளது.எனவே, சேர்மன் சாம்பசிவம் தெருவில், பழுதடைந்த நிலையில் உள்ள மின்மோட்டாரை சீரமைத்து, குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை