உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் 1,181 பயனாளிகளுக்கு ரூ.24 கோடியில் நல உதவிகள் வழங்கல்

காஞ்சியில் 1,181 பயனாளிகளுக்கு ரூ.24 கோடியில் நல உதவிகள் வழங்கல்

காஞ்சிபுரம், அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, அரசு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில், காஞ்சிபுரத்தில் சமத்துவ நாளான நேற்று, பயனாளிகளுக்கு கைத்தறி துறை அமைச்சர் காந்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், 1,181 பயனாளிகளுக்கு, 24.8 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், சப் - கலெக்டர் ஆஷிக் அலி, மேயர் மகாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை