உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அடிக்கல் நாட்டி 2 மாசமாச்சு பணி துவங்குவது எப்போது?

அடிக்கல் நாட்டி 2 மாசமாச்சு பணி துவங்குவது எப்போது?

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 24வது வார்டு, வி.என்.பெருமாள் தெருவில், 30 ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் ஷீட் போடப்பட்ட அங்கன்வாடி மையம் சிதிலமடைந்து, மழைக்கு ஒழுகும் நிலையில் இருந்தது.இதனால், மழைக்காலத்தில் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, பழைய அங்கன்வாடி கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், சட்டசபை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, 15.06 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்தாண்டு நவ., 7ம் தேதி பூமி பூஜையை துவக்கி வைத்து, அங்கன்வாடி மையம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டினார்.இதையடுத்து, அங்கன்வாடி மையம் அதே தெருவில் உள்ள வீட்டின் முதல் மாடியில், குறுகிய அறையில் இடமாற்றம் செய்யப்பட்டது. பூமி பூஜை போடப்பட்டு இரு மாதங்கள் நிறைவுபெற உள்ள நிலையில், புதிய அங்கன்வாடி மையம் கட்டுமான பணி துவக்கப்படாமல் கிடப்பில் உள்ளது.இதனால், தற்காலிகமாக முதல் மாடியில் இயங்கும் அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் குழந்தைகள், படிகளில் ஏறிச்சென்று வரும்போது தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, புதிய அங்கன்வாடி மையம் கட்டுமானத்தை துவக்கி, பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை