உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிறுவாக்கம்- மூலப்பட்டு இடையே மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படுமா?

சிறுவாக்கம்- மூலப்பட்டு இடையே மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படுமா?

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, சிறுவாக்கம் கிராமத்தில் இருந்து, வரதாபுரம், சாமந்திபுரம் கிராமங்களின் வழியாக 4 கி.மீ., துாரம் மூலப்பட்டு கிராம சாலை உள்ளது.இச்சாலை வழியாக, மூலபட்டு, மணியாட்சி, சாமந்திபுரம், அரங்கநாதபுரம் ஆகிய கிராமங்களைச்சேர்ந்த கிராம மக்கள் மற்றும் மாணவ-மாணவியர் வரதாபுரம், சிறுவாக்கம் வழியாக ஈஞ்சம்பாக்கம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் கல்வி கற்க செல்கின்றனர்.மாலை சிறப்பு வகுப்பு முடித்துவிட்டு, வீடு திரும்பும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு சென்று வீடு திரும்பும் நபர்கள் இருளில் செல்ல வேண்டி உள்ளது.இதில், சிறுவாக்கம், வரதாபுரம், சாமந்திபுரம் துணை கிராமங்களில் மட்டுமே ஒரு சில மின்கம்பங்களில் மின் விளக்குகள் உள்ளன. கிராமங்களை தாண்டி மின் கம்பங்கள் மற்றும் மின் விளக்குகள் அறவே இல்லை. எனவே, கிராமப்புற மாணவர்கள் மற்றும் மக்களின் நலன் கருதி சிறுவாக்கம்- மூலப்பட்டு இடையே மின் கம்பங்கள் மற்றும் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, அப்பகுதியினரிடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை