மேலும் செய்திகள்
புகார் பெட்டி
18-Jan-2025
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த அத்திவாக்கம் கிராமத்தில் இருந்து, ஆலப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரம், ஆலப்பாக்கம் ஏரி கலங்கல் உள்ளது.இந்த கலங்கல் தரைப்பாலத்தின் வழியாக, ஆலப்பாக்கம், சூரமேணிகுப்பம் ஆகிய கிராம மக்கள், அத்திவாக்கம் கிராமம் வழியாக, சின்னையன்சத்திரம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளுக்கு சென்று வந்தனர். வட கிழக்கு பருவ மழைக்கு ஆலப்பாக்கம் ஏரி நிரம்பினால், கலங்கலில் தண்ணீர் செல்லும் போது, ஆலப்பாக்கம் - ஆத்திவாக்கம் இடையே, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும். இதுபோன்ற நேரங்களில், வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது.எனவே, ஆலப்பாக்கம் ஏரி கலங்கல் அருகே, உயர் மட்ட தரைப்பாலம் கட்டுவதற்கு, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18-Jan-2025