உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

 பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கோளிவாக்கம் கிராமத்தில், அடையாளம் தெரியாத பேருந்து மோதியதில், 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்தார். காஞ்சிபுரம் அடுத்த கோளிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள், 55; இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த எல்லம்மாள், 60, ஆகிய இருவரும், கோளிவாக்கம் கிராமத்தில் உள்ள, பேருந்து நிறுத்தத்தில் நேற்று, அதிகாலை 5:00 மணியளவில் நின்றிருந்தனர். அப்போது, அவ்வழியாக சென்ற பேருந்து ஒன்று, மோதியதில், இரு பெண்களும் படுகாயமடைந்தனர். இதில், வள்ளியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த எல்லம்மாள், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து ஏற்படுத்திய பேருந்து பற்றி, காஞ்சி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ