உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சமூக பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூகப் பணியாளர்கள் இரு பணியிடங்கள் என மொத்தம் மூன்று பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பாதுகாப்பு அலுவலர் பணியிடத்துக்கு, சமூகபணி, சமூகவியல்,குழந்தை வளர்ச்சி, மனித உரிமைகள், பொதுநிர்வாகம் உள்ளிட்ட படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.சமூக பணியாளர் பணிக்கு, சமூகபணி சமூகவியல், சமூகவியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவமுள்ள விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன், பிப்.,6 ம் தேதிக்குள், மாமல்லன் நகரில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி