உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

உத்திரமேரூர்:உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, திருப்புலிவனம், கருவேப்பம்பூண்டி, மருத்துவன்பாடி, ஆனைப்பள்ளம் ஆகிய பகுதிகளில் உத்திரமேரூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மல்லிகாபுரம் சுடுகாடு அருகே கருவேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்த அர்ஜுன், 21 ; என்பவர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது, 1.2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அர்ஜுனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி