உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டூ-வீலர் திருடிய வாலிபர் கைது

டூ-வீலர் திருடிய வாலிபர் கைது

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், மாமல்லன் நகரைச் சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன், 40. இவர், கடந்த 13ம் தேதி, காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டருகே, இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.சிறிது நேரம் கழித்து மீண்டும் இருசக்கர வாகனத்தை வந்து பார்த்த போது, திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த சிவகாஞ்சி போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவில் உள்ள கீழ் வீதி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 20, என்பவர், இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி