உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பைக் கவிழ்ந்து வாலிபர் பலி

பைக் கவிழ்ந்து வாலிபர் பலி

காஞ்சிபுரம்:பைக் கவிழ்ந்து, இன்ஜினியரிங் பட்டதாரி வாலிபர் இறந்தார்.சென்னை அனகாபுத்தூரை சேர்ந்தவர் அருளானந்தம். இவரது மகன் டேவிட்குணசிங், 25, இன்ஜினியரிங் பட்டதாரி. நேற்று முன்தினம் வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம், அண்ணாநகரில் வசிக்கும், நண்பர் கார்த்திக் வீட்டிற்கு சென்றார். மாலை 3 மணிக்கு, இருவரும் அப்பாச்சி பைக்கில், தாம்பரத்திற்கு புறப்பட்டனர். வண்டலூர் மேம்பாலம் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், நிலை தடுமாறி கவிழ்ந்தது. பலத்தக் காயமடைந்த இருவரும், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி டேவிட்குணசிங் இறந்தார். ஓட்டேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி