உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி வாலிபர் உயிரிழப்பு

சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி வாலிபர் உயிரிழப்பு

உத்திரமேரூர்:நாஞ்சிபுரம் அருகே, சாலை விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வாலிபர் நேற்று உயிரிழந்தார்.உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, சோழனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாவிஷ்ணு, 24. இவர், கடந்த ஜூன் 26ம் தேதி, 'ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ்' பைக்கில், சோழனுாரில் இருந்து நாஞ்சிபுரத்திற்கு சென்றார்.அப்போது, மகாவிஷ்ணு பைக்கில் நாஞ்சிபுரம் அருகே சென்றபோது நிலைத்தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கினார். இதை கண்ட அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்நிலையில், அங்கு, மகாவிஷ்ணு, நேற்று காலை, உயிரிழந்தார். சம்பவம் குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ