மேலும் செய்திகள்
குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு
11-Aug-2024
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே குழிச்சலை சேர்ந்தவர் ஜான்சன், 60; ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் ரசல்ராஜ், 60; கூலித் தொழிலாளி. இருவரும் பள்ளி பருவம் முதல் நண்பர்கள்.குடும்ப பிரச்னையால், ஜான்சன் நேற்று ரப்பர் பால் வெட்டச் சென்ற இடத்தில், ரப்பர் மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.நண்பர் ரசல் ராஜ் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ஜான்சன் தற்கொலை பற்றி போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது.இதைக்கேட்டு அதிர்ச்சியில் கையில் இருந்த உணவுடன் அப்படியே சிறிது நேரம் அமைதியாக இருந்த அவர், சுருண்டு விழுந்தார். அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இறப்பிலும் நண்பர்கள் இணைபிரியாதது அப்பகுதியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
11-Aug-2024