உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / போலீஸ் குடியிருப்பில் எஸ்.ஐ., வீட்டில் திருட்டு

போலீஸ் குடியிருப்பில் எஸ்.ஐ., வீட்டில் திருட்டு

நாகர்கோவில்: நாகர்கோவில் ஆயுதப்படை எஸ்.ஐ., சில்வான்ஸ். இங்குள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் மனைவியுடன் சொந்த ஊரான தக்கலை அருகே கல்லன்குழிக்கு சென்றார். நேற்று இரவு இவர்கள் வீடு திரும்பிய போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை பெட்டியில், 4 சவரன் நகை மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரிந்தது. திருடப்பட்ட பணம் குறித்த விபரம் தெரியவில்லை. நேசமணி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை