சிறுமியை தாயாக்கிய சிறுவன்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரியை சேர்ந்த, 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்துவிட்டு, வீட்டில் உள்ளார். சில நாட்களாக அவரின் நடவடிக்கைகளில் வித்தியாசம் இருப்பதை உணர்ந்த அவரது தாய், அவரிடம் விசாரித்த போது, வயிறு வலிப்பதாகக் கூறியுள்ளார். மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் சிறுமி, 8 மாத கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதே பகுதி, 17 வயது சிறுவன், மாணவியை காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக்கியது தெரியவந்தது. நாகர்கோவில் மகளிர் போலீசார், சிறுவன் மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.