உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / உறவினருடன் தொடர்பு வைத்திருந்த ஆசிரியைக்கு அறிவுரை கூறி கணவனுடன் அனுப்பிய போலீஸ்

உறவினருடன் தொடர்பு வைத்திருந்த ஆசிரியைக்கு அறிவுரை கூறி கணவனுடன் அனுப்பிய போலீஸ்

நாகர்கோவில்:தொடர்பு வைத்திருந்த உறவினரான வாலிபருடன் கணவர், குழந்தைகளை தவிர்த்து செல்ல முயன்ற ஆசிரியைக்கு அறிவுரை கூறி மகளிர் போலீசார் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் மேல கிருஷ்ணன் புதூர் தனியார் பள்ளி ஆசிரியைக்கு திருமணமாகி கணவர், இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டுக்கு உறவுக்கார வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து செல்வார். இதில் வாலிபருக்கும், ஆசிரியைக்கும் தொடர்பு ஏற்பட்டது. அதை கையும் களவுமாக ஒரு நாள் கண்டறிந்த கணவர் மனைவியை கடுமையாக தாக்கினார். இருப்பினும் அந்த வாலிபர் அடிக்கடி அவர் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.சம்பவத்தன்று வெளியே சென்ற கணவர் வீடு திரும்பிய போது வீட்டில் ஆசிரியையும், வாலிபரும் பேசிக் கொண்டிருந்தனர். இதையடுத்து வாலிபரை கணவர் தாக்கினார்.இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசிற்கு புகார் சென்றது. போலீசாரின் விசாரணையின் போது கணவர் தன்னை கடுமையாக தாக்குவதாகவும், அவருடன் செல்ல மாட்டேன் என்றும், வாலிபருடன் தான் செல்வதாகவும் ஆசிரியை தெரிவித்துள்ளார். அதையடுத்து அவருக்கு அறிவுரை கூறிய போலீசாரிடம் ஒரு வழியாக கணவருடன் செல்ல ஆசிரியை சம்மதித்தார். மனைவியை அடிக்கக்கூடாது என கணவர், இனி ஆசிரியை வீட்டுக்கு செல்ல கூடாது என வாலிபரையும் போலீசார் எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !