மேலும் செய்திகள்
சிறுமிக்கு தொல்லை வாலிபர் மீது போக்சோ
19-May-2025
நாகர்கோவில்:காதலித்த பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்டதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தோவாளை புதூர் காலனியைச் சேர்ந்தவர் அஜித்குமார் 32. இவரும் ஆரல்வாய் மொழியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மாணவி இவரிடம் பேசுவதை தவிர்த்தார்.அந்த மாணவிக்கு பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். நேற்று நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் மாணவி ஆரல்வாய்மொழி போலீசில் ஒரு புகார் அளித்தார்.அதில் தான் அஜித் குமாரை காதலித்து வந்ததாகவும், அவர் குடிபோதையில் பிரச்சனை செய்ததால் காதலில் விரிசல் ஏற்பட்டதாகவும், இந்தச் சூழலில் தனது நிச்சயதார்த்தத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படுத்தக் கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.அஜித்குமாரை அழைத்து விசாரணை நடத்திய போலீசார் மாணவியிடம் தகராறு செய்யக்கூடாது என்று எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பினர். இதனால் மனமுடைந்த அஜித்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
19-May-2025