உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / குமரியில் குறிப்பிட்ட பகுதிகளில் பெண் குழந்தை பிறப்பு குறைவு ஆய்வுக்கு கலெக்டர் உத்தரவு

குமரியில் குறிப்பிட்ட பகுதிகளில் பெண் குழந்தை பிறப்பு குறைவு ஆய்வுக்கு கலெக்டர் உத்தரவு

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில்நாகர்கோவில் மாநகராட்சி உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது என்று கலெக்டர் அழகு மீனா கூறினார்.கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் நாகர்கோவிலில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது:குமரி மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், பெண் பாதுகாப்பிற்கான செயல்படுத்தப்படும் சட்ட திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தோவாளை, ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. முதல் குழந்தை பெண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் கருவில் இருக்கும் இரண்டாவது குழந்தையின் பாலினம் அறியப்படுகிறது. அது பெண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் கருவிலேயே சிதைக்கும் நிலை உள்ளது. இந்த நிலை மாற அனைத்து ஸ்கேன் மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வரதட்சணை கொடுமை சம்பவங்களும் குமரி மாவட்டத்தில் அதிகமாக உள்ளது. பெண்கள் படித்திருந்தாலும்திருமணத்திற்கு பின்பும் பெற்றோரையை சார்ந்து வாழும் நிலை உள்ளது. இந்த நிலை மாறவேண்டும். இதற்காக நடத்தப்படும் பயிற்சியில் சம்பந்தப்பட்டவர்கள் முழுமையாக பங்கெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை