உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / கள்ளக்காதல் விவகாரத்தில் விஷம் குடித்த கண்டக்டர் பலி

கள்ளக்காதல் விவகாரத்தில் விஷம் குடித்த கண்டக்டர் பலி

நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் விஷம் குடித்த பஸ் கண்டக்டர் இறந்தார். கள்ளக்காதலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நாகர்கோவில் அருகே பறக்கை சோதிரி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் 32. அரசு பஸ் தற்காலிக கண்டக்டர். மனைவி பவித்ரா 25. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. பவித்ரா ஆரல்வாய்மொழியில் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றுகிறார்.நேற்று காலை பிரேம்குமார் விஷம் குடித்து படுக்கை அறையில் மயங்கி கிடந்தார். தாயார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியில் பிரேம்குமார் இறந்தார்.பிரேம்குமாரும் பறக்கை பகுதியைச் சேர்ந்த 38 வயதான பெண்ணும் நெருங்கி பழகினர். அந்தப் பெண்ணுக்கு கணவர், குழந்தைகள் உள்ளனர். பிரேம்குமாருடனான தொடர்பை சமீபத்தில் அந்தப் பெண் துண்டித்தார். இதனால் பிரேமாருக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.கோட்டார் பகுதியில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் அந்தப் பெண்ணை சந்தித்து தன்னுடன் வாழ வரும்படி பிரேம்குமார் வற்புறுத்தினார். அந்த பெண் மறுத்தார். இதனால் வீட்டுக்கு சென்ற பிரேம்குமார் விஷம் குடித்துள்ளார். இதை தொடர்ந்து அந்த பெண்ணும் வீட்டுக்கு சென்று விஷம் குடித்தது தெரியவந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பிரேம்குமார் மனைவி பவித்ரா புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை