உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / பைக் சுவரில் மோதியதில் கணவர் பலி: மனைவி, குழந்தை காயம்

பைக் சுவரில் மோதியதில் கணவர் பலி: மனைவி, குழந்தை காயம்

திருவட்டார் : வேர்க்கிளம்பி அருகே பைக் காம்பவுண்ட் சுவர் மீது மோதி விபத்திற்குள்ளானதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். தடிக்காரங்கோணம், இந்திராநகரை சேர்ந்தவர் தேவராஜ்(29). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று மனைவி லீலிஸ்(27), மகன் ஜாண்ஜெர்லின் ஆகிய மூவரும் பைக்கில் தடிக்காரங்கோணத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். வேர்க்கிளம்பி பண்டாரக்கோணம் அருகே வரும் போது தேவராஜின் நண்பர் ஒருவர் கை காட்டியுள்ளார். அப்போது தேவராஜூம் பதிலுக்கு கை காட்டியுள்ளார். இதில் நிலை தடுமாறி பைக் அருகில் உள்ள வீட்டு காம்பவுண்ட் சுவர் மீது மோதி விபத்திற்குளானது. இதில் தேவராஜின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மனைவி லீலிஸ், மகன் ஜாண்ஜெர்லினுக்கும் காயம் ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள் இவர்களை மீட்டு ஆஸ்பத்திரக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே தேவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த லீலிஸ், ஜாண்ஜெர்லின் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேவராஜின் சடலத்தை குழித்துறை ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை